தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

0
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து – திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் பல முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். தற்போது திமுக தேர்தல் அறிக்கையை அந்த கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் ஏழை மக்களின் நலனுக்காக பல முக்கிய திட்டங்களை அண்ணா அறிவலாயத்தில் அவர் வெளியிட்டு உள்ளார். அவை,

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை – 3 ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு பதில்!!

  • சிறு தொழில் செய்யும் ஏழை வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும்.
  • சிறு விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ரூ.10,000 வரை மானியம் வழங்கப்படும்.
  • மேலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.
  • தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் வசதி.

அமமுக தேர்தல் அறிக்கை – டிடிவி.தினகரன் வெளியீடு!!

  • கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.
  • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
  • பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.

தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வுகளில் மாற்றம் – தேர்வு இயக்ககத்திடம் கோரிக்கை!!

  • ஜூன் 3 ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
  • பறக்கும் சாலைத் திட்டம் பெரிய மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும்.
  • மின் கட்டணம் மாதம் ஒரு முறை செலுத்தும் வகையில் அமல்படுத்தப்படும்.

அரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு – உயர்நீதி மன்றம் உத்தரவு!!!

  • நியாய விலைக்கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை மற்றும் உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
  • அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் இடஒதுக்கீடு 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் அதிகரிக்கப்படும்.
  • பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
  • அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
  • முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும்.
  • 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி – தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!!

  • பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத்துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்
  • பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
  • மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
  • வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இளைஞர்களின் திறன் பயிற்சி மையங்களாக செயல்படும்.
  • 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படும்.
  • அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்கும் நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!

  • தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலை வாய்ப்புகள் தமிழர்க்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.
  • வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும்.
  • அரசுப்பணி மகளிருக்கு பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
  • 35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத, ஆதரவற்ற மகளிருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
  • அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வை ஃபைவ் வசதி செய்து தரப்படும்.
  • போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • இளைஞர்களுக்கான கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!