TANCET தேர்வுக்கான விடைக்குறிப்பு 2024 – அதிகாரப்பூர்வ வெளியீடு!

0
TANCET தேர்வுக்கான விடைக்குறிப்பு 2024 - அதிகாரப்பூர்வ வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட TANCET 2024 நுழைவுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TANCET 2024 விடைக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் MCA, MBA ஆகிய முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் TANCET நுழைவுத் தேர்வு மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2024 – 2025ம் கல்வி ஆண்டுக்கான TANCET 2024 தேர்வானது கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (13.03.2024) இத்தேர்வுக்கான விடைக்குறிப்பானது வெளியிடப்படவுள்ளது.

IDBI வங்கியில் Security Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இவ்விடைக்குறிப்பை பெற விரும்பும் தேர்வர்கள் https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணைப்பை முதலில் கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் “Click Here” என்பதை கிளிக் செய்யவும். பின் தோன்றும் Login பக்கத்தில் தேர்வர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளீடு செய்து “Login” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் TANCET 2024 தேர்வுக்கான விடைக்குறிப்பானது திரையில் தோன்றும். இதனை தேவர்கள் தங்களது வருங்கால தேவைக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!