RRB ALP Exam 2026: அதிகாரப்பூர்வ தேர்வு முறை மற்றும் பாடத்திட்ட விவரங்கள்!

0

RRB ALP Recruitment 2026:
11,127 காலியிடங்கள்!
பாடத்திட்டம்மற்றும் தேர்வு மாதிரி

ரயில்வே துறையில் வேலை தேடும் தமிழக மாணவர்களுக்கு ஒரு மாபெரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் (RRB) 11,127 அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ALP) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது (CEN 01/2026)  ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 15 முதல் தொடங்கியுள்ளன.

தேர்வு செயல்முறை (Selection Process);

லோகோ பைலட் பணிக்கு மொத்தம் 5 கட்ட தேர்வுகள் நடைபெறும்:

    • CBT 1 (முதற்கட்ட தேர்வு):
      தகுதித் தேர்வு மட்டுமே. இறுதி மெரிட் பட்டியலுக்கு இது கணக்கிடப்படாது.

    • CBT 2 (இரண்டாம் கட்ட தேர்வு):
      உங்களது இறுதி வேலைவாய்ப்பைத் தீர்மானிக்கும் முதன்மைத் தேர்வு.

    • CBAT (சைக்காலஜி டெஸ்ட்):
      கணினி வழி ஆப்டிடியூட் தேர்வு.
      அவசரகால முடிவெடுக்கும் திறன் சோதிக்கப்படும்.

    • சான்றிதழ் சரிபார்ப்பு:
      அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

    • மருத்துவப் பரிசோதனை:
      கண்ணாடி அணியாத A-1 மருத்துவத் தகுதி கட்டாயமாகும்.

 1.CBT 1 தேர்வு மாதிரி (CBT 1 Exam Pattern);

    • மொத்த கேள்விகள்:
      75 கேள்விகள்.

    • தேர்வு நேரம்:
      60 நிமிடங்கள் (1 மணி நேரம்).

    • நெகட்டிவ் மதிப்பெண்:
      ஒவ்வொரு3தவறானபதில்களுக்கும்
      1/3மதிப்பெண்கழிக்கப்படும்


பாடவாரியான முக்கிய தலைப்புகள்:

    • கணிதம் (20 கேள்விகள்):
      எண் முறைமை, போட்மாஸ் (BODMAS) விதி, தசம மற்றும் பின்னங்கள்,எல்சிஎம் & எச்சிஎப், விகிதம், சதவீதம், லாப நஷ்டம்,
      தனிவட்டி & கூட்டுவட்டி, காலம் மற்றும் வேலை.

    • ரீசனிங் (25 கேள்விகள்):
      கோடிங்-டிகோடிங், இரத்த உறவுகள், திசைகள்,
      வென் வரைபடங்கள், சிலாஜிசம்.

    • பொது அறிவியல் (20 கேள்விகள்):
      9 மற்றும் 10-ஆம் வகுப்பு தரத்திலான இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள்.
      (இயற்பியல் கணக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்).

    • நடப்பு நிகழ்வுகள் (10 கேள்விகள்):
      கடந்த 6 மாத முக்கிய விளையாட்டுச் செய்திகள், விருதுகள், மத்திய அரசுத் திட்டங்கள்.

2. CBT 2 தேர்வு மாதிரி (CBT 2 Exam Pattern);

CBT 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும்.
இது மொத்தம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும்

(மொத்தம் 175 கேள்விகள்).
Part A மற்றும் Part B என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

(Part A – 100 மதிப்பெண்கள் | நேரம்: 90 நிமிடங்கள்)

இதுவே உங்களுடைய இறுதி மெரிட் பட்டியலைத் தீர்மானிக்கும்.

    • கணிதம் மற்றும் ரீசனிங் (CBT 1 விட சற்று கடினமாக இருக்கும்).

    • அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் (Basic Science & Engineering): பொறியியல் வரைபடம் (Engineering Drawing), அலகுகள் மற்றும் அளவீடுகள், வேகம் மற்றும் திசைவேகம், வேலை, ஆற்றல் மற்றும் சக்தி, வெப்பம் மற்றும் வெப்பநிலை, அடிப்படை மின்சாரம்.

(Part B – 75 மதிப்பெண்கள் | நேரம்: 60 நிமிடங்கள்);

இது நீங்கள் தேர்வு செய்யும் தொழில்நுட்பப் பிரிவு (Trade) சார்ந்த தகுதித் தேர்வு மட்டுமே.

    • ஐடிஐ (ITI) அல்லது டிப்ளமோ பாடப்பிரிவுகள்
      (எலக்ட்ரீஷியன்/ஃபிட்டர்/டீசல் மெக்கானிக் போன்றவை).

    • முக்கிய விதி: இதில் 35% மதிப்பெண்கள் (26.25 மார்க்) பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
      இதில் ஃபெயில் ஆனால் Part A மதிப்பெண்கள் செல்லாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!