Home Blog

கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு – CSK போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை!!

0
கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு – CSK போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை!!

இந்த ஆண்டுக்கான IPL லீக்கில் CSK அணி விளையாடும் ஹோம் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 27 அன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை ஆன்லைன் மற்றும் நேரடியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் விற்பனை

வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று துவங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 25) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கான ஹோம் போட்டி டிக்கெட்டுகளின் ஆன்லைன் மற்றும் கவுண்டர் விற்பனை ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் துவங்குகிறது. அந்த வகையில், MA சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரியில் டிக்கெட்டுகளை நேரடியாக பெற்றுகொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

அதே போல, மார்ச் 27, 2023 அன்று PAYTM மற்றும் www.insider.in மூலம் ஆன்லைனிலும் டிக்கெட்டுகள் கிடைக்கும். அதன்படி, சி/டி/இ லோயர் இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.1,500 என்றும், D/E அப்பர் இருக்கைகளுக்கான டிக்கெட் விலை ரூ.3,000 என்றும் I/J/K லோயர் இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.2,500 என்றும், I/J/K அப்பர் இருக்கைகளுக்கான டிக்கெட் ரூ.2,000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10% ஊழியர்கள் பணிநீக்கம் – பிரபல ஊடக நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

மேலும், போட்டிகள் நடைபெறும் நேரங்களில் டிஜிட்டல் கேமராக்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ட்ரோன்கள், பவர் பேங்க்கள் அல்லது மொபைல் போன்கள் தவிர வேறு எந்த மின்னணு சாதனங்களும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட், லேப்டாப் பைகள், குடை போன்ற பொருட்கள் வளாகத்திற்குள் கொண்டு வர தடைவ விதிக்கப்பட்டுள்ளது. கவுண்டர் மற்றும் ஆன்லைன் விற்பனையின் போது, ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

சுமார் 10% ஊழியர்கள் பணிநீக்கம் – பிரபல ஊடக நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

0
சுமார் 10% ஊழியர்கள் பணிநீக்கம் – பிரபல ஊடக நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடக அமைப்பான NPR சுமார் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் 4 பாட்காஸ்ட்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

பணிநீக்க அறிவிப்பு

மாறி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலகளவில் உள்ள பல முன்னணி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் துவக்கி ஈகாமர்ஸ் வரையுள்ள பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வரிசையில், தற்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடக நிறுவனம் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – 100 டிகிரியை தாண்டி பதிவு!!

நேஷனல் பப்ளிக் ரேடியோ (NPR) என்ற ஊடக அமைப்பு, அதன் ஊழியர்களில் 10 சதவிகிதம் அதாவது 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதே நேரத்தில் 4 பாட்காஸ்ட் தளங்களையும் நிறுத்தியுள்ளது. இது குறித்து NPR தலைமை நிர்வாகி ஜான் லான்சிங் கூறும் போது, செலவுகளை மறுசீரமைப்பதன் மூலம் எதிர்காலத்தைப் பாதுகாக்க இது போன்ற முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இப்போது பணிநீக்க அறிவிப்பின் மூலம் NPR நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 1,050 ஆக குறையும் என்பது கவனிக்கத்தக்கது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – 100 டிகிரியை தாண்டி பதிவு!!

0
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – 100 டிகிரியை தாண்டி பதிவு!!

தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெப்பம் வரும் நாட்களில் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெப்பத்தை தணிக்கும் விதமாக கடந்த ஒரு சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், சென்னை உள்ளிட்ட சில வடக்கு மாவட்டங்கள் மட்டும் திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட சில தென் மாவட்டங்களில் பரவலான அளவு மழை பெய்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Bank அதிகாரியாக பணியாற்ற சிறந்த Online Class – Weekend batch தொடக்கம்! குறைந்த கட்டணத்தில்!

இந்த சூழலிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்ஸியஸை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மதுரை, கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டம் பரமத்தியில் 101.3 என்ற அளவிலும், ஈரோட்டில் 101.12 என்ற அளவிலும், மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி என்ற அளவிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெயில் அடுத்து வரும் நாட்களுக்கு மேலும் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

நடப்பு நிகழ்வுகள் – 26 மார்ச் 2023

நடப்பு நிகழ்வுகள் – 26 மார்ச் 2023

தேசிய செய்திகள்

ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை ஸ்ரீ பூபேந்தர் யாதவ் ஹரியானாவில் தொடங்கி வைத்தார்.

  • ஹரியானாவில் உள்ள திக்லி கிராமத்தில் சர்வதேச காடுகள் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், ஐந்து மாநிலங்களில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரைச் சுற்றியுள்ள 5 கிமீ தாங்கல் பகுதியை பசுமையாக்கும் முக்கிய முயற்சியான ஆரவல்லி பசுமை சுவர் திட்டத்தை ஸ்ரீ பூபேந்தர் தொடங்கினார்.
  • வனத்துறை தலையீடுகள் மூலம் பாலைவனமாக்கல் மற்றும் நிலச் சீரழிவை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய செயல் திட்டத்தை ஸ்ரீ யாதவ் வெளியிட்டார்.

 

சர்வதேச செய்திகள்

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும் சட்டத்தை உட்டா இயற்றுகிறது

  • சமூக ஊடக தளங்களில் குழந்தைகள் பதிவு செய்வதற்கு முன் பெற்றோரின் சம்மதம் தேவைப்படும் என இரண்டு நடவடிக்கைகளில் குடியரசுக் கட்சி கவர்னர் ஸ்பென்சர் காக்ஸ் கையெழுத்திட்டார். இதன் மூலம் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றும் முதல் மாநிலமாக உட்டா ஆனது.
  • போதைப்பொருள் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி தங்கள் பயன்பாடுகளுக்கு குழந்தைகளை ஈர்க்கும் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தடுக்க இந்த சட்டம் உதவுகிறது.

 

மாநில செய்திகள்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – 2023

  • மாநில பேரிடர் மேலாண்மை கொள்கை மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் – 2023ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
  • இந்த மாநில பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று, நிலச்சரிவுகள், பூகம்பம், ரசாயன தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அணுமின் நிலையங்கள் போன்ற பல்வேறு வகையான பேரிடர்களை கையாளுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள சிக்பள்ளாப்பூரில் மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் திறந்து வைத்தார்.
  • அதன் பிறகு பெங்களூரில் உள்ள கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

 

விருதுகள்

ஃபோர்ப்ஸ் விருதை வென்ற இஷா அம்பானி

  • இளம் தொழிலதிபர் இஷா அம்பானிக்கு ‘அடுத்த தலைமுறைக்கான சிறந்த தொழில் முனைவோர்’ (GenNext Entrepreneur) என்ற விருதை ஃபோர்ப்ஸ் இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பிரபல வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ், தலைமைத்துவத்தில் சிறந்த விளங்குவோருக்கான  விருது வழங்கி வருகிறது.
  • இஷா அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகள் ஆவார்.

 

தொல்லியல் ஆய்வுகள்

தஞ்சாக்கூரில் பாண்டியர் கால சிற்பம்

  • 7 அடி உயரத்தில் பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்ட பிரம்ம சாஸ்தா சிற்பம் தஞ்சாக்கூரில் கண்டறியப்பட்டது. தலையில் சிதைந்த நிலையில் கரண்ட மகுடம், மார்பில் வீரச்சங்கிலி மற்றும் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறது.
  • இது வரை தமிழகத்தில் 7 அடி உயர பிரம்ம சாஸ்தா சிற்பம் வேறு எங்கும் கண்டறியவில்லை.இந்த சிற்பத்தின் வடிவமைப்பு முற்கால பாண்டியர்களின் கலையை காட்டுகிறது.

 

விளையாட்டு செய்திகள்

197 போட்டிகளில் ரொனால்டோ பங்கேற்று சாதனை

  • யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் போர்த்துக்கல் அணியானது லியச்ட்டேன்ஸ்டீன் அணியுடன் மோதியது.இந்த போட்டி ரொனால்டோவின் 197-வது சர்வதேச போட்டியாக அமைந்தது.
  • இந்நிலையில் அவர் சர்வதேச அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை  படைத்துள்ளார். இதன் மூலம் குவைத் வீரர் அல்-முதாவாவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.சர்வதேச போட்டிகளில்  இதுவரை அவர்120 கோல்களை அடித்து முதலிடம் வகிக்கிறார்.

மெஸ்சி 800 கோல்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

  • அர்ஜெண்டினா – பனாமா அணிகள் இடையிலான கால்பந்து போட்டி பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இது லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியாகும்.
  • இந்த போட்டியில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி தனது 800-வது கோலை அடித்தார்.

உலக மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார்.

  • 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் 48 கிலோ பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கையுடன் மோதினர்.
  • 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவை சேர்ந்த நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

 

முக்கிய தினம்

வங்காளதேசத்தின் சுதந்திர தினம்

  • வங்காளதேசம் 1947 முதல் 1971 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. 1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வங்காளதேசம் சுதந்திர நாடாக மாறியது.
  • இந்த விடுதலைப் போரில் இந்திய ராணுவத்தின் உதவியோடு பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசத்தின் முக்தி வாகினி படை வெற்றி பெற்றது. இந்த தினத்தை வங்காளதேச மக்கள் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றன.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

Bank அதிகாரியாக பணியாற்ற சிறந்த Online Class – Weekend batch தொடக்கம்! குறைந்த கட்டணத்தில்!

0
Bank அதிகாரியாக பணியாற்ற சிறந்த Online Class – Weekend batch தொடக்கம்! குறைந்த கட்டணத்தில்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான வங்கி தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தற்போது பெரும்பாலான இளைஞர்கள் வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது IBPS, SBI உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வங்கி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். பொதுவாக வங்கி தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தால் போதும். அதனால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் படித்து கொண்டு வருகின்றனர்.

SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

இத்தகைய போட்டிகள் மிகுந்த சூழலில் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்றிட ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Highlights:
  • ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் அலுவலக உதவியாளர், Specialist Officers, துணை மேலாளர் உள்ளிட்ட அனைத்து வகையான வங்கி தேர்வுக்கும் உதவும் வகையில் பாடங்கள் நடத்தப்படும்.
  • அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதுடன், தற்போது வார இறுதி நாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
  • மேலும் போட்டித்தேர்வில் Minus Mark பெறுவதை நீங்கள் தவிர்க்கும் வகையில், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
  • மாணவர்கள் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை 24 மணி நேரமும், 7 நாட்களும் பார்த்து படித்து கொள்ளலாம்.
BANK Exam 2023 Online Class – Evening Batch : Click Here 
 
Bank Exam 2023 Online Class – Morning Batch : Click Here 
 
Bank Exam 2023 Online Class (Weekend batch) : Click Here
 
For More Details: 8101 234 234.

இந்தியாவில் ஏப்ரல் 10 & 11 தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை – மத்திய அரசு ஏற்பாடு!

0
இந்தியாவில் ஏப்ரல் 10 & 11 தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை – மத்திய அரசு ஏற்பாடு!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10, 11 தேதிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல்

இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது. ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பல வகையான வைரஸ் பரவி வருகிறது. அதில் கொரோனாவும் அதிகளவில் பரவுகிறது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதால் அந்த அளவிற்கு பாதிப்பு இல்லை என்றாலும், மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

அதிகரிக்கும் இன்ஃபுளுயன்சா பாதிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசு தகவல்!

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் வருகிற ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்பட இருக்கிறது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Exams Daily Mobile App Download

PGCIL பவர்கிரிட் ஆணையத்தில் மாதம் ரூ.1,60,000 /- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

PGCIL பவர்கிரிட் ஆணையத்தில் மாதம் ரூ.1,60,000 /- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Engineer Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
பணியின் பெயர் Engineer Trainee
பணியிடங்கள் 138
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
POWERGRID காலிப்பணியிடங்கள்:
  • Engineer Trainee பதவிக்கு என 138 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது,
  • Electrical – 83 பணியிடங்கள்
  • Civil – 20 பணியிடங்கள்
  • Electronics – 20 பணியிடங்கள்
  • Computer Science – 15 பணியிடங்கள்
Engineer Trainee வயது வரம்பு:

31.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள் GATE 2023 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ITI தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ || உடனே விண்ணப்பியுங்கள்!

Trainee சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.160,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:
  • GATE 2023 Marks
  • Group Discussion
  • Personal Interview
POWER GRID விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 27.03.2023 முதல் 18.04.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

தெற்கு ரயில்வேயில் 9000 காலிப்பணியிடங்கள் – முக்கிய தகவல் வெளியீடு!

0
தெற்கு ரயில்வேயில் 9000 காலிப்பணியிடங்கள் – முக்கிய தகவல் வெளியீடு!

நாடு முழுவதும் பலர் அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர் பிரிவில் 9000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதனை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ரயில்வே பணியிடங்கள்

இந்தியாவில் முக்கியமான துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருக்கிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வேயில் ரயில் நிலைய அலுவலர்கள் டிக்கெட் பரிசோதகர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் ரயில் இயக்கத்தில் முக்கிய பணியாற்றும் நிலைய அலுவலர் காலிப்பணியிடங்கள் 700ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் இன்ஃபுளுயன்சா பாதிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை! மத்திய அரசு தகவல்!

அவ்வாறு தெற்கு ரயில்வேயில் சுமார் 9000 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் இந்தியாவில் ரயில் நிலைய அலுவலர் பிரிவில் காலியாக இருக்கும் 9000 பணியிடங்கள் நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அதில் 50 சதவிகிதம் பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருப்பதாகவும், மேலும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 9000 நிலைய அலுவலர்களும் பணியில் அமர்த்தப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

ITI தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ || உடனே விண்ணப்பியுங்கள்!

ITI தேர்ச்சி பெற்றவரா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ || உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய சக்தி ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute) ஆனது விளைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு குறிதத முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Power Research Institute
பணியின் பெயர் Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I, Assistant Gr-II
பணியிடங்கள் 99
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CPRI காலிப்பணியிடங்கள்:

CPRI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கு மொத்தம் 99 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Technician கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / B.Sc / Diploma in Engineering / ITI / BA/ BSc. / B.Com/ BBA / BBM / BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPRI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28, 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.20,000/- || நேர்காணல் மட்டுமே!

Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Engineering Officer Grade 1 – Level – 7 (Rs. 44,900 – 1,42,400)
  • Scientific Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
  • Engineering Assistant Level – 6 (Rs. 35,400 – 1,12,400)
  • Technician Grade 1 Level – 2 (Rs. 19,900– 63,200)
  • Assistant Grade II Level – 4 (Rs. 25,500 – 81,100)
CPRI விண்ணப்ப கட்டணம்:
  • Engineering Officer Gr.1, Scientific Assistant, Engineering Assistant – ரூ.1000/-
  • Technician Gr.1, Assistant Gr. II – ரூ.500/-
  • SC/ST/PwBD/Ex-servicemen/women – கட்டணம் இல்லை.
Technician தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Computer Based Test / Skill Test/Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.04.2023ம் தேதிக்கு போன் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என் அதெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க விரையுங்கள்!

NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க விரையுங்கள்!

NIEPMD ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Deputy Registrar, Lecture in clinical psychology பணிக்கு என 02 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Deputy Registrar, Lecturer in clinical psychology
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 days
விண்ணப்பிக்கும் முறை online
NIEPMD பணியிடங்கள்:

NIEPMD ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Deputy Registrar, Lecture in clinical psychology பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

NIEPMD ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Group-A Level 11 மற்றும் Group-A Level 10 ஊதிய அளவின் படி மாதம் சம்பளம் வழங்கப்படும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்:ரூ.20,000/- || நேர்காணல் மட்டுமே!

NIEPMD தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIEPMD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes