அம்ரித் பாரத் திட்டத்தின் மேம்பாட்டு பணிகள் நிறைவு.. விரைவில் பிரதமர் தலைமையில் திறப்பு விழா..!!
இந்தியாவில் ரயில் வழி போக்குவரத்து என்பது பொதுமக்கள் வாழ்வில் இன்றியமையாத பங்கு வகுக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை விரைவாக அடைய பெரும்பாலும் ரயில் போக்குவரத்தை நம்பி உள்ளனர். மேலும், நாட்டில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் போன்ற காரணங்களால் இந்தியன் ரயில்வே வாரியத்தால் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம் பிப்ரவரி 2023 இல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் “ரயில்வே ஸ்டேஷன் நவீனப்படுத்துதல், பயணிகள் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், முதல்கட்டமாக 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் மோடி வருகின்ற ஏப்ரல் 19-ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது”.


























