IPL 2025: கம்பேக் கொடுக்குமா சென்னை அணி..?? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்..!!

0
will Chennai Super Kings dominate Punjab Kings on today match
will Chennai Super Kings dominate Punjab Kings on today match

IPL 2025: கம்பேக் கொடுக்குமா சென்னை அணி..?? இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்..!!

 

2025 ஆம் ஆண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பல்வேறு அணிகள் தங்களது செயல்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இன்று பஞ்சாபில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

NIT திருச்சி Professor வேலை – 40+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் அணி நல்ல பார்மில் இருக்கும் நிலையில் மறுபுறம் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டியில் விளையாடியுள்ள சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி அடைந்து ஒரே ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் உள்ளது. இதனால் தோனி உட்பட சென்னை அணியின் வீரர்கள் அனைவரையும்  ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். எனவே மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்ககின்றன. மேலும், இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி கொண்ட நிலையில் 16 போட்டியில் சென்னையும், 14 போட்டியில் பஞ்சாப்பும் வென்று இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!