SSC CGL 2026 Application Window Closed: Fee Payment Last Date Today!

0

SSC CGL 2026 ஆன்லைன் விண்ணப்பம் நிறைவு: அடுத்து என்ன செய்ய வேண்டும்? (முழு விவரங்கள்)

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த SSC CGL 2026 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நேற்றுடன் (ஜூன் 25, 2026) அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. (SSC) மூலமாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 12,256 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.தொழில்நுட்பக் கோளாறுகளால் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 23 முதல் ஜூன் 25 வரை இந்த விண்ணப்ப விண்டோ மீண்டும் நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.நீங்க இந்தத் தேர்வுக்கு வெற்றிகரமாக விண்ணப்பித்திருந்தால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் முழுமையாகப் பார்ப்போம்.

1. ஆன்லைன் கட்டணம் செலுத்த இன்று (ஜூன் 26) இறுதி நாள்!

விண்ணப்பப் படிவத்தை (Application Form) நேற்று ஜூன் 25-க்குள் வெற்றிகரமாகச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை (Application Fee) ஆன்லைனில் செலுத்த இன்று, ஜூன் 26, 2026 (இரவு 11:00 மணி) இறுதி நாளாகும்.
  • கட்டணம்:
    பொதுப்பிரிவினர் (General/OBC/EWS) ₹100 செலுத்த வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி (SC/ST/PwD) பிரிவினருக்குக் கட்டணம் ஏதுமில்லை.
  • எச்சரிக்கை:
    விண்ணப்பப் படிவத்தை மட்டும் பூர்த்தி செய்துவிட்டு, இன்று இரவு 11 மணிக்குள் ஆன்லைன் பேமெண்ட் செய்யத் தவறினால் உங்களுடைய விண்ணப்பம் முழுமையாக நிராகரிக்கப்படும்.

2. விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விண்டோ (Correction Window) எப்போது?

அவசரத்தில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம் (Photo), கையொப்பம் (Signature) அல்லது தங்களின் கல்வித் தகுதி விவரங்களில் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால், கவலைப்படத் தேவையில்லை. அதனைத் திருத்துவதற்கான பிரத்யேகக் கரெக்ஷன் விண்டோ வரும் ஜூலை 1 முதல் ஜூலை 3, 2026 (இரவு 11:00 மணி) வரை திறந்திருக்கும்.
  • முதன்முறையாகத் திருத்தம் செய்ய ₹200 கட்டணமும், இரண்டாவது முறை திருத்தம் செய்ய ₹500 கட்டணமும் ஆன்லைனில் செலுத்த வேண்டி இருக்கும்.
  • எனவே, இந்த முறை மிகவும் கவனமாக உங்களுடைய விவரங்களைச் சரிபார்த்துத் திருத்திக் கொள்ளுங்கள்.

3. SSC CGL-ல் உள்ள முக்கிய பதவிகள் (Top Target Posts)

SSC CGL தேர்வில் நீங்கள் எடுக்கும் அதிக மதிப்பெண்களின் அடிப்படையில், இந்திய அளவில் மிகவும் பவர்ஃபுல் மற்றும் மதிப்புமிக்க மத்திய அரசுப் பதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். அதில் சில முக்கியப் பதவிகள்:
  1. Assistant Audit Officer (AAO):
    இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையில் (CAG) உள்ள மிக உயர்ந்த கெஜட்டட் (Gazetted) பதவி இதுவாகும்.
  2. Income Tax Inspector:
    மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் (CBDT) வருமான வரி ஆய்வாளராகப் பணிபுரியும் மிகவும் கெளரவமான பதவி.
  3. Central Excise Inspector / GST Inspector:
    மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) கீழ் வரும் முக்கியப் பதவி.
  4. Assistant Section Officer (ASO):
    மத்திய செயலகம் (CSS) அல்லது உளவுத்துறை (Intelligence Bureau), வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) போன்ற டாப் அலுவலகங்களில் அட்மின் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு.

4. தேர்வு எப்போது நடக்கும்? (Tier-1 Exam Date)

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, SSC CGL 2026-க்கான முதல் கட்டத் தேர்வு (Tier-1 Computer Based Exam) வரும் செப்டம்பர்-அக்டோபர் 2026 காலகட்டத்தில் நடைபெறவுள்ளது. இப்போதிருந்து பார்த்தால் உங்களிடம் தோராயமாக 3 மாதங்கள் மட்டுமே தயாராவதற்குக் கால அவகாசம் உள்ளது.பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் ரீசனிங் (Reasoning) ஆகிய நான்கு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் 
மத்திய அரசில் 12,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகும். எனவே, விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் இன்றே உங்களுக்கான பேமெண்ட் ஸ்டேட்டஸை (Payment Status) சரிபார்த்துவிட்டு, தங்களின் படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தத் தொடங்குங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!