அமமுக தேர்தல் அறிக்கை – டிடிவி.தினகரன் வெளியீடு!!

0
அமமுக தேர்தல் அறிக்கை - டிடிவி.தினகரன் வெளியீடு!!
அமமுக தேர்தல் அறிக்கை - டிடிவி.தினகரன் வெளியீடு!! அமமுக தேர்தல் அறிக்கை - டிடிவி.தினகரன் வெளியீடு!!
அமமுக தேர்தல் அறிக்கை – டிடிவி.தினகரன் வெளியீடு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அமமுக கட்சி தலைவர் தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் அறிக்கை வெளியீடு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் வேட்பாளர்கள் வெளியீடு, தேர்தல் அறிக்கை என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

மேலும் அனைத்து கட்சியினரும் எந்தெந்த கட்சியினர் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இன்று அந்த கட்சியின் தலைவர் டிடி.வி.தினகரன் தேர்தல் அறிக்கைகளை இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வுகளில் மாற்றம் – தேர்வு இயக்ககத்திடம் கோரிக்கை!!

63 பக்கங்களை கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் 100 திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் அம்மா பொருளாதார புரட்சித் திட்டம் என்ற பெயரில் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகளை படிப்படியாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்கும் நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!

விவசாயிகளின் வீடு தேடி உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் மானியத்துடன் வழங்கப்படும் என்றும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு மூவாயிரம் ரூபாய் வரையும் கரும்பு ஒரு டன்னுக்கு நான்காயிரம் ரூபாயாகவும் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்படுவது போலவே கல்லூரி மாணவர்களும் பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பாஸ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

அரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு – உயர்நீதி மன்றம் உத்தரவு!!!

தமிழக பேருந்துகளில் மூத்த குடிமகன்களுக்கு பேருந்து கட்டணத்தில் 50% சலுகை வழங்கப்படும். கிராமப்புறத் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்க, குறைந்தது 5 பொறியியல் பட்டதாரிகள் இணைந்த ஒரு குழுவுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என 63 பக்க தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!