NIFT நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.80,000/- ஊதியம்!
National Institute of Fashion Technology (NIFT) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technical Consultant, Content Manager, Creative Visualizer போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 19.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | National Institute of Fashion Technology (NIFT) |
பணியின் பெயர் | Technical Consultant, Content Manager, Creative Visualizer, Documentation and Metadata Creator, Research Associate, Graphic Designer, Subject Reviewer, Metadata Reviewer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Email Id |
NIFT காலிப்பணியிடங்கள்:
NIFT நிறுவனத்தில் Technical Consultant, Content Manager, Creative Visualizer, Documentation and Metadata Creator, Research Associate, Graphic Designer, Subject Reviewer, Metadata Reviewer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
NIFT பணிக்கான கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ME., M.Tech, M.Sc, MCA, MA, Bachelor’s Degree, PG Diploma, Master Degree, Ph.D ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
NIFT பணிக்கான முன்னனுபவம்:
இந்த NIFT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
NIFT பணிக்கான மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.45,000/- முதல் ரூ.80,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
NIFT தேர்வு முறை:
இந்த NIFT நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NIELIT நிறுவனத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
NIFT விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19.11.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.