Re-NEET 2026: ஜூன் 21ல் மறுதேர்வு! மே 21க்குள் இதை மாத்துங்க!!!

0

Re-NEET 2026 முக்கிய அறிவிப்பு:
ஜூன் 21ல் மறுதேர்வு! புதிய விதிகள் மற்றும்
தேர்வு மையத்தை மாற்றும் முழு விபரம்;

Re-NEET 2026 Official Update:
கடந்த மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA) புதிய மறுதேர்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நாடு முழுவதும் மறுதேர்வு (Re-NEET)நடைபெற உள்ளது.மாணவர்கள் தங்களின் தற்போதைய முகவரி மற்றும் தேர்வு எழுத விரும்பும் நகரத்தை
(Exam City Choice) மாற்றுவதற்கான திருத்த விண்டோ
(Correction Window) தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதற்கான கடைசி நாள்மே21,2026 என்பதால் மாணவர்கள் உடனடியாக இந்த மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

1. Re-NEET 2026: முக்கிய தேதிகள் மற்றும் நேரங்கள் (Official Schedule);

    • மறுதேர்வு தேதி (Re-Exam Date):
      ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை).

    • தேர்வு நேரம் (Exam Timing):
      மதியம் 02:00 மணி முதல் மாலை 05:15 மணிவரை 

    • தேர்வுக்கான மொத்த நேரம்:
      முறையான சரிபார்ப்புப் பணிகளுக்காக இந்த முறை மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் கூடுதலாக(மொத்தம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் /195 நிமிடங்கள்) வழங்கப்படுகிறது.

    • முகவரி/தேர்வு நகரம் மாற்ற கடைசி நாள்:
      மே 21, 2026 (இரவு 11:50 மணி வரை).

    • புதிய ஹால் டிக்கெட் (Admit Card) வெளியீடு:
      ஜூன் 14, 2026 அல்லது அதற்கு முன்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும்.
       

2. இந்த மறுதேர்வில் உள்ள முக்கிய விதிகள்
(Verified Key Rules)

    1. கூடுதல் கட்டணம் இல்லை:
      மறுதேர்வு எழுத மாணவர்கள் எந்தவொரு கூடுதல் கட்டணமும் (No Extra Fee) செலுத்தத் தேவையில்லை.

    2. மறுபதிவு செய்ய முடியாது:
      ஏற்கனவே மே 3 தேர்வுக்குப் பதிவு செய்து, வெற்றிகரமாகக் கட்டணம் செலுத்திய 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத தகுதியானவர்கள். புதிய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

    3. புதிய ஹால் டிக்கெட் கட்டாயம்:
      பழைய ஹால் டிக்கெட் செல்லாது. NTA Official Website மூலம் வெளியிடப்படும் புதிய ஹால் டிக்கெட்டை மட்டுமே தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

    4. தேர்வு முறை (Exam Mode):
      இம்முறையும் வழக்கம் போல ஓஎம்ஆர் (OMR Sheet) அடிப்படையிலான பேனா மற்றும் தாள் (Pen & Paper Mode) முறையிலேயே தேர்வு நடக்கும்.

    5. பாடத்திட்டம் (Syllabus):
      நீட் தேர்வின் பாடத்திட்டத்திலோ (Syllabus) அல்லது மதிப்பெண் வழங்கும் முறையிலோ (Marking Scheme) எந்த மாற்றமும் இல்லை. 

3. தேர்வு எழுதும் நகரத்தை (Exam City) மாற்றுவது எப்படி? (Step-by-Step Guide)

மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்க, தங்களுக்குப் பக்கத்தில் உள்ள நகரத்தைத் தேர்வு செய்ய NTA அனுமதித்துள்ளது. மாற்றும் வழிமுறைகள்: 

    • படி 1: முதற்கட்டமாக NTA NEET Official Portal என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

    • படி 2: உங்கள் ‘Application Number’ மற்றும் ‘Password’ உள்ளீடு செய்து லாகின் (Login) செய்யவும்.

    • படி 3: திரையில் தோன்றும் “Correction Window / Update Present Address & City Choice” என்ற லிங்க்கைக் கிளிக் செய்யவும்.

    • படி 4: உங்கள் தற்போதைய முகவரி (Present Address) மற்றும் உங்களுக்கு விருப்பமான 1 மற்றும் 2வது தேர்வு நகரங்களை (Exam City Choice) சரியாகத் தேர்வு செய்யவும்.

    • படி 5: விபரங்களைச் சமர்ப்பித்து (Submit), உறுதிப்படுத்தப்பட்ட படிவத்தை (Confirmation Page) எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

🌐 முக்கிய இணைப்புகள் (Official Links)

தேர்வு மையத்தை மாற்ற / லாகின் செய்ய:
NTA NEET Official Portal

NTA முதன்மை தளம்:
NTA Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!