UPSC Civil Services 2026 ஹால் டிக்கெட் வெளியீடு: டவுன்லோட் செய்வது எப்படி?

0

UPSCபிரிலிம்ஸ்2026ஹால்டிக்கெட்வெளியீடு:
டவுன்லோட் செய்வது எப்படி?
முழு விவரங்கள்!!!!

UPSC Civil Services Prelims 2026 தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வுக்கானஇ-அட்மிட் கார்டை(e-Admit Card / Hall Ticket) மே 15, 2026 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள், கடைசி நேர இணையப் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தங்களின் ஹால் டிக்கெட்டை உடனடியாகப் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

UPSC CSE 2026: முக்கிய தேதிகள் மற்றும் காலக்கோடு (Timeline)

UPSC தேர்வின் அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, தேர்வு மற்றும் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வதற்கான முக்கிய தேதிகள் கீழே அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளன:

நிகழ்வுகள் (Events)

முக்கிய தேதிகள் (Dates)

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய நாள்

பிப்ரவரி 4, 2026

ஆன்லைன் விண்ணப்பம் முடிவுற்ற நாள்

பிப்ரவரி 27, 2026

ஹால் டிக்கெட் வெளியான தேதி (Starting Date)

மே 15, 2026

ஹால் டிக்கெட் டவுன்லோட் இறுதி நாள் (Ending Date)

மே 24, 2026 (மதியம் வரை)

UPSC பிரிலிம்ஸ் தேர்வு நாள் (Exam Date)

மே 24, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

UPSC முதன்மைத் தேர்வு (Mains Exam) ஆரம்பம்

ஆகஸ்ட் 21, 2026

 UPSC பிரிலிம்ஸ் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்வது எப்படி?
(Step-by-Step)

    1. முதலில் UPSC-ன் அதிகாரப்பூர்வ  இணையதளமான
      upsc.gov.in அல்லது upsconline.nic.in
      பக்கத்திற்குச் செல்லவும்.

    2. முகப்புப் பக்கத்தில் உள்ள “e-Admit Card: Civil Services
      (Preliminary) Examination, 2026”
      என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

    3. திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களை
      (Instructions) கவனமாகப் படித்து, ‘Yes’ கொடுக்கவும்.

    4. இப்போது உங்களது பதிவு எண் (Registration ID – RID) அல்லது ரோல் எண் (RollNumber) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிட வேண்டும்.

    5. இறுதியாக, அங்குள்ள Captcha குறியீட்டை டைப் செய்து ‘Submit’ என்பதை கிளிக் செய்யவும்.

    6. இப்போது உங்களது ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதனை PDF வடிவில் டவுன்லோட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்

குறிப்பு: UPSC தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தபால் மூலம் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட மாட்டாது. ஆன்லைன் போர்டல் வழியாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும்.

 முக்கிய லிங்க்குகள் (Official Links)

UPSC அதிகாரப்பூர்வ இணையதளம்:

https://upsc.gov.in

UPSC ஆன்லைன் போர்டல் (Admit Card Link):

https://upsconline.nic.in

தேர்வு எழுதவிருக்கும் அனைத்து அரசுப் பணி ஆவலாளர்களுக்கும் எங்களது வாழ்த்துகள்!
இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!