
அரசு ஊழியர்களுக்கு உயரும் ஊதியம் – கூடுதலாக ரூ. 25,000 ஊக்கத்தொகை.. அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்கள் பணி காலத்தில் கூடுதல் கல்வி தகுதிகளை பெற ஊக்குவிக்கும் வகையில் இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஊக்கத்தொகை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதியை பெறும் பட்சத்தில் அவர்களுக்கு 6% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஊதிய உயர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் நவ.10 வரை விடுமுறை – முதல்வர் அதிரடி உத்தரவு!
அதாவது அரசு ஊழியர்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 25,000 ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி உடையவர்களுக்கு ரூ. 20,000 பட்டப்படிப்பு முடித்தவர்கள் ரூ.10,000 வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.