அனைத்து பள்ளிகளுக்கும் நவ.10 வரை விடுமுறை – முதல்வர் அதிரடி உத்தரவு!
டெல்லி என்.சி.ஆரில் மாசு அபாயகரமான அளவைத் தாண்டி இருப்பதால் பள்ளிகளுக்கு நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
இந்தியாவின் தலைநகர் டெல்லி என்.சி.ஆரில் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் வானில் மூடுபனி காணப்படுகிறது. அதனால் மக்களுக்கு ஒரு சில பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக என்சிஆர் பகுதியில் வசிக்கும் மக்களும் கண்களில் எரியும் உணர்வுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் சராசரி AQI இன்னும் 471 ஆக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்துவிடீர்களா? தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு!!
அதனால் அந்த பகுதியில் GRAP-4 விதி அமல்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக அந்த பகுதிகளுக்குள் லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த பகுதியில் உள்ள தொடக்க பள்ளிகள் நவம்பர் 10 ஆம் தேதி வரை மூடப்படுவதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் கால நிலை மோசமாக இருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.