இந்தியாவில் உயர்த்தப்படும் விமான கட்டணம்? மத்திய அரசு அறிவிப்பு! பயணிகள் கவலை!

0
இந்தியாவில் உயர்த்தப்படும் விமான கட்டணம்? மத்திய அரசு அறிவிப்பு! பயணிகள் கவலை!
இந்தியாவில் உயர்த்தப்படும் விமான கட்டணம்? மத்திய அரசு அறிவிப்பு! பயணிகள் கவலை!
இந்தியாவில் உயர்த்தப்படும் விமான கட்டணம்? மத்திய அரசு அறிவிப்பு! பயணிகள் கவலை!

இந்தியாவில் விமான பயண கட்டணத்தை, விமான நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக விமான கட்டணங்கள் அதிகரிக்க கூடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் விமான கட்டண வரப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஒன்றிய அரசு:

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக நாட்டில் ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த கொரோனா பரவல் மனிதர்களிடையே எளிதில் பரவக்கூடிய நோயாகும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் எளிதில் பரவக்கூடிய தொற்று நோய் என்பதில் உலக சுகாதார நிறுவனம் என மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

Exams Daily Mobile App Download

மக்கள் வேறு நாடுகளுக்கோ, அல்லது வேறு மாநிலங்களுக்கோ பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. நாட்டில் சர்வதேச விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டது. வேறு நாட்டினரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. நாட்டில் சர்வதேச விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தடுக்கும் விதத்தில் உள்நாட்டு விமான கட்டணத்தில் ஒன்றிய அரசு கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்தது.

தமிழகத்தில் “இன்றைய தினம்” டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும் இந்த நடைமுறையானது விமான நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலிப்பதை தடுப்பதுடன், கொரோனா காலத்தில் மக்கள் தேவையற்ற பயணங்களை செய்வதை தடுக்கும் நோக்கத்திலும் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டண உச்ச வரம்பை வருகிற 31ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி உள்நாட்டு விமான நிறுவனங்கள் தாங்களே கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களின் தினசரி தேவை மற்றும் விமான எரிபொருள் தேவை ஆகியவற்றை பரிசீலித்த பின்பு தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும் விமான கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதால் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!