கடை திறப்பு விழாவில் குடும்பத்தை எதிர்பார்க்கும் கதிர், போகாமல் இருக்கும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
கடை திறப்பு விழாவில் குடும்பத்தை எதிர்பார்க்கும் கதிர், போகாமல் இருக்கும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கடை திறப்பு விழாவில் குடும்பத்தை எதிர்பார்க்கும் கதிர், போகாமல் இருக்கும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கடை திறப்பு விழாவில் குடும்பத்தை எதிர்பார்க்கும் கதிர், போகாமல் இருக்கும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா மீனா அப்பா கடையில் வேலை நிறைய இருப்பதாக சொல்ல, அதனால் இனிமேல் போகமாட்டேன் என சொல்கிறார். அதனால் மீனா ஜீவாவிடம் சண்டை போடுகிறார். பின் கதிரும் முல்லையும் புது கடை திறப்பு விழாவில் மூர்த்தி குடும்பத்துடன் வருவார்களா என எதிர்பார்க்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கதிருடைய கடைக்கு சென்றுவிட்டு வர, ஆனால் மூர்த்தியிடம் அதை மறைகிறார். பின் கதிர் அண்ணன் கடை திறப்பு விழாவிற்கு போக வேண்டாமா என கேட்க ஆனால் மூர்த்தி அதை பற்றி பேசாமல் இருக்கிறார். தனம், கதிர் மளிகை பொருள்கள் வாங்க வந்ததாக சொல்ல, மீனா இலவசமாக கொடுத்து இருப்பீங்களே என சொல்கிறார். ஆனால் தனம் அவங்க பொருளுக்கு காசு கொடுத்து தான் வாங்கியதாக சொல்கிறார். பின் கண்ணன் நானும் கடையை பார்த்தேன் பயங்கரமாக ரெடியாகி இருக்கிறது தோரணம் எல்லாம் கட்டி இருப்பதாக சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

நீ போனியா என கேட்க இல்லை என கண்ணன் சொல்கிறார். அப்போது ஜீவா வர என்ன இவ்வளவு நேரமாகிவிட்டது என மூர்த்தி கேட்கிறார். மீனா அப்பா கடையில் நிறைய வேலை இருந்ததாக ஜீவா சொல்ல, அண்ணி நீங்க கடையில் கஷ்டப்பட்டு இருப்பீங்களே என கேட்கிறார். அப்போது மீனா சரி இன்னைக்கு ஒரு நாள் தான என சொல்ல, அவர் சொல்லும் வேலை எல்லாம் பார்த்தால் என்னை அங்கையே வைத்து கொள்வார் போல என சொல்கிறார். என் அப்பா பாவம் தான என மீனா சொல்ல, தனம் அப்படி எல்லாம் சொல்ல கூடாது என சொல்கிறார். பின் ஜீவா நான் இனிமேல் போகமாட்டேன் என சொல்ல, கண்ணன் நாளைக்கு கடை திறப்பு விழாவிற்கு போறோமா இல்லையா என கேட்க? தனம் தேவை இல்லாமல் பேசாதே என சொல்கிறார்.

பாக்கியாவை வீட்டில் இருக்க சொல்லும் இனியா, மனதை மாற்றிக் கொள்ள சொல்லும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

பின் ஜீவா கண்ணனிடம் கதிர் கடைக்கு போனியா என கேட்க ஆமாம் என கண்ணன் சொல்கிறார். கடை நன்றாக இருப்பதாக கண்ணன் சொல்ல, ஜீவா கஷ்டப்பட்டு கடை திறக்கிறான் என சொல்கிறார். பின் கண்ணன் எனக்கும் வேலை வந்துவிட்டது இல்லை என்றால் நானும் துணையாக இருப்பேன் என சொல்கிறார். பின் மீனா வர ஜீவா கை கால் எல்லாம் வலிப்பதாக சொல்கிறார். பின் ஜீவா பயங்கர வேலை என சொல்ல, மீனா சும்மா எதாவது சொல்லாதே நம்ம கடையில் நீ கஷ்டப்பட்டு வேலை பார்த்ததே இல்லையா என கேட்கிறார்.

உன் அப்பா சொன்ன வேலை எல்லாம் அங்கே இருப்பவர்கள் கூட பார்க்கலாம் என சொல்ல, மீனா அப்படி எல்லாம் இல்லை அவருக்கு உடம்பு சரி இல்லை அதனால் பயத்தில் இருப்பதாக சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா நக்கலாக பேச, மீனா நீ எதற்கு குறுக்கே வந்து பேசுகிறாய் என கேட்கிறார். பின் ஐஸ்வர்யா உங்க அப்பா வேண்டும் என்றே ஜீவா மாமாவை இருக்க வைத்ததாக சொல்கிறார். கண்ணன் சண்டையை நிறுத்துங்கள் என சொல்கிறார். பின் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கதிர் முல்லை ரூமிற்கு வருகின்றனர். அப்போது ஐஸ்வர்யா, நமக்கு என ரூம் கிடைக்க எத்தனை நாள் ஆகிவிட்டது என கேட்கிறார்.

பின் ஐஸ்வர்யா கட்டில் சின்னதாக இருப்பதாக சொல்ல, கண்ணன் அண்ணன் அண்ணி இல்லாமல் அவங்க ரூமிற்கு வருவது சரியாக இல்லை என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா பெரிய காட்டில் வாங்கிருவோம் என சொல்ல, கண்ணன் அண்ணன் இல்லாமல் ரூமிற்கு வருவது சரியாக இல்லை என சொல்கிறார். ஐஸ்வர்யா சீக்கிரமாக முல்லை அக்காவும் கதிர் மாமாவும் வர தான் போறாங்க என சொல்கிறார். மறுநாள் கதிர் முல்லையின் கடை திறப்பு விழா தொடங்குகிறது.

முல்லையும் முருகனும் ஆர்வமாக வேலை பார்க்க முல்லை, தனம் அக்கா வருவார்களா என காத்திருப்போம் என சொல்கிறார். முல்லையின் அம்மா அந்த வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா என கேட்க முல்லை நாங்க வீட்டிற்கு சென்று கூப்பிடவில்லை என சொல்கிறார். அதான் அப்பா சென்று சொன்னார்களே என கேட்க, முல்லை அப்பா பேசாமல் அமைதியாக இருக்க சொல்கிறார். பின் முல்லையின் அக்கா மல்லி வருகிறார். என்ன நான் வந்துவிட்டேன் என பாக்குறீங்களா, உங்க வீட்டு ஆளுங்க மாதிரி நான் இல்லை என சொல்ல, நான் ஒன்றும் சொல்லவில்லை என முல்லை சொல்கிறார். பின் மல்லி ஒரு லட்சம் பணத்தை கொடுக்க முல்லை எதற்கு என கேட்கிறார்.

கடையில் செலவு இருக்குமே என சொல்ல, அதெல்லாம் இருக்கட்டும் நாங்களே எல்லா செலவையும் செய்துவிட்டோம் என சொல்கிறார். மல்லி பணத்தை கதிரிடம் கொடுக்க ஆனால் அவரும் வாங்கவில்லை. முல்லை எல்லாரும் பேசி பிரச்சனை செய்ததால் தான் நாங்க வெளியே வந்தோம், அவங்க யாரும் கடை திறக்க வரவில்லை என்றாலும் நாங்க நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தி கொண்டு தான் இருப்பாங்க, என்ன இருந்தாலும் அது எங்க வீடு, உன் பணம் எங்களுக்கு தேவை இல்லை என முல்லை சொல்கிறார். முல்லை அம்மா, மல்லியிடம் நல்லதுக்கே காலம் இல்லை என சொல்கிறார்.

பின் கதிர் தனது நண்பரை அழைத்து தெரு முனை வரை சென்று எங்க குடும்பத்தில் யாரவது வருகிறார்களா என பார்க்க செல்கிறார். கதிர் இன்னும் நேரம் இருக்கிறது என சொல்ல, முருகன் ஆமாம் என சொல்கிறார். பின் கதிர் பால் காய்ச்ச ஏற்பாடுகளை செய்து வை என சொல்ல, கண்ணன் வரேன் என சொன்னான் நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்கிறார். கதிர் வாசலில் நின்று பார்க்க யாரும் வரவில்லை. மறுப்பக்கம் வீட்டில் கண்ணன் கடை திறப்பு விழாவிற்கு போக வேண்டும் என ஆசையாக இருக்கிறார். ஆனால் மூர்த்தி எதுவும் பேசாமல் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!