தமிழகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவேற்றம் செய்யப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
கோரிக்கை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வாக்குறுதி வழங்கியபடி பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் எனவும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும், அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில் தற்போது வரையிலும் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
NZ vs PAK 2023 WC UPDATES: மழையால் போட்டி பாதிப்பு.!
இந்நிலையில், அடுத்த 3 மாதத்திற்குள் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், ஆசிரியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றும் தருவாயில் இருப்பதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.