NZ vs PAK 2023 WC UPDATES: மழையால் போட்டி பாதிப்பு.!
2023 உலக கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது.
Join Our WhatsApp
Group” for Latest Updates
அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரன் 108 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் 95 ரன்களில் அவுட் ஆனார். பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் குவித்து விளையாடிய பொழுது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தததால் டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.