அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகள் மூடல்.. ஷாக் அப்டேட் – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகள் மூடல்.. ஷாக் அப்டேட் - பொதுமக்கள் கவனத்திற்கு!
அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகள் மூடல்.. ஷாக் அப்டேட் - பொதுமக்கள் கவனத்திற்கு!
அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகள் மூடல்.. ஷாக் அப்டேட் – பொதுமக்கள் கவனத்திற்கு!

மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்தால் டிசம்பர் மாதம் முதல் ரேஷன் சேவைகள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரேஷன் நிறுத்தம்

அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை மேற்கு வங்காள அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் முதல் ரேஷன் சேவை நிறுத்தப்படும் என அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிஸ்வம்பர் போஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் மாநிலக் குழுவின் நீட்டிக்கப்பட்ட கூட்டத்தில், பிரச்னைகள் தீர்க்கப்படாவிட்டால், வங்காளத்தின் ரேஷன் டீலர்கள் டிசம்பர் மாதம் முதல் ரேஷன் சேவைகளை செய்யமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் – அமைச்சர் அறிவிப்பு!!

மேலும் பேசிய அவர் மத்திய அரசு அரசு ஊழியர்களுக்கு தற்போதைய சந்தை விலைப்படி அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. ஆனால், அதே அளவு ரேஷன் டீலர்களின் கமிஷன் உயர்த்தப்படாமல் இருக்கிறது. அதனால் ஊழியர்கள் கோவத்தில் இருக்கின்றனர். கொரோனா காலத்தில் மாநில அரசு இலவச ரேஷன்களை அறிவித்தது. ஆனால் அதனால் ஏற்பட்ட கடன் இன்னும் நிலுவையில் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!