உஷார் மக்களே ..போலி இணையதளம் மூலம் பட்டாசு விற்பனை – எச்சரிக்கும் சைபர் கிரைம்!
தமிழக சைபர் காவல் துறையினர் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு விற்பனை களத்தில் குதித்துள்ள போலி இணையதளங்கள் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பட்டாசு விற்பனை:
தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் பட்டாசு தான் அனைவரின் நினைவுக்கும் வரும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளி தினத்தில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள். இந்திய தயாரிப்பு பட்டாசுகளுடன் அதிக அளவில் சீன தயாரிப்பு பட்டாசுகளும் விதவிதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சைபர் கிரைம் காவல் துறையினர் தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகள் மூடல்.. ஷாக் அப்டேட் – பொதுமக்கள் கவனத்திற்கு!
அதாவது தீபாவளி பண்டிகையை ஒட்டி போலி இணையதளங்கள் மூலம் மிகவும் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடிகள் நடந்து வருவதாகவும், இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். குறைந்த விலையில் கிடைக்கும் பட்டாசுகள் குறித்த சமூக வலைதள விளம்பரங்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.