தமிழகத்தில் ஒரு நாளைக்கு ரூ.375/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் உள்ள பல குறைபாடுகள் உள்ள நபர்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிறுவனம் NIEPMD ஆனது Audiologist & Speech Language pathologist மற்றும் Vocational Instructor (Consultant) ஒப்பந்தப் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 10.11.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | Audiologist & Speech Language pathologist மற்றும் Vocational Instructor (Consultant) |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10/11/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NIEPMD காலிப்பணியிடங்கள்:
Audiologist & Speech Language pathologist மற்றும் Vocational Instructor (Consultant) பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Audiologist & Speech தகுதி விவரங்கள்:
- கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்துM.Sc (Sp. & Hg.)/ M.ASLP/M.Sc. (SLP)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லுபடியாகும் RCI பதிவு வைத்திருக்க வேண்டும்.
- சம்பள விவரம்: ஒரு நாளைக்கு 4 அமர்வுகளுக்கு ரூ.375/- வீதம் மாதத்திற்கு தோராயமாக ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Vocational Instructor (Consultant) தகுதி விவரங்கள்:
- கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master degree with D.Ed/B.Ed Spl. Edn. (ASD/MD) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லுபடியாகும் RCI பதிவு வைத்திருக்க வேண்டும்.
- சம்பள விவரம்: ஒரு நாளைக்கு 4 அமர்வுகளுக்கு ரூ.275/- வீதம் மாதத்திற்கு தோராயமாக ரூ.22,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாமல் வேலை – சம்பளம்: ரூ.41,962/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
NIEPMD விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10/11/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேர்காணல் விவரங்கள்:
இடம்: NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு, சென்னை – 603 112.
நாள்: 10.11.2023
நேரம்: 11.00 A.M
.