CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு எப்போது? – பட்டியல் வெளியீடு!
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு:
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் 87.33% மாணவர்களும், 10-ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் 93.12 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மேலும், பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மட்டுமல்லாமல் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மறுத்தேர்வினை எழுதலாம் என சிபிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறு சேமிப்பில் முதலீடு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இது கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!
இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான துணைத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்தத் துணைத் தேர்வினை எழுத இருக்கும் மாணவர்கள் அந்தந்த பள்ளியின் மூலமாகவே நேரடியாக விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தேர்வு நடைபெற இருக்கிறது என்பது குறித்தான பட்டியலையும் தற்போது சிபிஎஸ்இ வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற இருக்கும் மாணவர்கள் இந்த துணைத் தேர்வினை நல்ல முறையாக பயன்படுத்திக் கொள்ளும்படியும் சிபிஎஸ்இ தற்போது அறிவித்திருக்கிறது.