SSC CHSL தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – வெளியான முக்கிய அறிவிப்பு!
பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் வெளியிட்ட SSC CHSL / ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
SSC அறிவிப்பு:
பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது 2023 தேர்வின் மூலம் லோயர் டிவிஷனல் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உட்பட குரூப் சி பதவிகளுக்கான 1600 காலியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. மே 9ம் தேதி முதல் இத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டது. இந்நிலையில், SSC வாரியம் முக்கிய அறிவிப்பை தேர்வர்களுக்கு வெளியிட்டுள்ளது.
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதன்படி, ஒருங்கிணைந்த உயர்நிலை (10+2) நிலைத் தேர்வு-2023க்கான விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தை ஜூன் 8ம் தேதியான இறுதி நாளுக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம் என்றும், இறுதி நாட்களில் சர்வர்களில் அதிக ட்ராஃபிக் காரணமாக இணையதளத்தில் துண்டிப்பு, உள்நுழைவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) 10+2 2023 அடுக்கு 1 தேர்வு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 22, 2023 வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.