கல்வி தொலைக்காட்சியை போல CBSEக்கு புது சேனல் – ஜூலை முதல் தொடக்கம்!
தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்த வகுப்புகளுக்கு டிவி சேனல் இருப்பது போல சிபிஎஸ்இக்கு டிவி சேனல் ஜூலைக்குள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டிவி சேனல்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வருகிற ஜூலை மாதத்திற்குள் தனது சொந்த டிவி சேனலைக் கொண்டு வரத் தயாராக இருக்கும் என்று கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து இன்று (ஜூன் 1) நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர்களுடன் நடந்த உரையாடலில் தெரிவித்துள்ளனர். மேலும் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு கலப்பு கற்றல் அணுகலை வழங்குவதற்காக, 1,000 கோடி ரூபாய் செலவில் 200 தொலைக்காட்சி சேனல்களை கல்வி அமைச்சகம் தொடங்கும் என அறிவித்தார்
சிறு சேமிப்பில் முதலீடு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இது கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு!
மேலும் கல்வியை டிவி சேனல் மூலமாக அணுகினால் தான் அது அனைத்து மக்களையும் சென்று அடையும். அது மட்டுமில்லாமல் டிவி, வானொலி மற்றும் பிற ஊடகங்கள் மூலமாகவும், இணையத்தில் மட்டும் அல்லாமல் கலப்புக் கற்றலையும் நாங்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிப்போம் என தெரிவித்த அவர், இது ஜூலை மாதத்திற்குள் அமலுக்கு வரும் என பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கூடுதல் செயலாளர் லாம்சோங்ஹோய் ஸ்வீட்டி சாங்சன் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download