மூத்த குடிமக்களுக்கான அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம் – இரட்டிப்பு லாபம்! உடனே சேருங்க!!
மூத்த குடிமக்களுக்கு எதிர்காலத்தில் உதவும்படியாக அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸ்:
குறைவான முதலீடு, கூடுதல் லாபம் மற்றும் பாதுகாப்பு காரணமாக பலரும் அஞ்சல் அலுவலக திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அஞ்சல் அலுவலகம் மூத்த குடிமக்களுக்காக senior citizen saving scheme என்கிற திட்டத்தின் மூலமாக இரட்டிப்பு லாபத்தை வழங்கி வருகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் இணைந்து குறைந்தபட்சமாக ரூ. 1000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரைக்கும் முதலீடு செய்து கொள்ளலாம்.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு வந்த நல்ல செய்தி.. அகவிலைப்படி உயர்வு – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
மேலும், மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து முதலீடு செய்த தொகையை பெற்றுக்கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர நினைத்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் வரைக்கும் நீடித்துக் கொள்ள இயலும். இது மட்டுமல்லாமல், senior citizen saving scheme திட்டத்தில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை வட்டி கணக்கீடு செய்யப்பட்டு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.