அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு வந்த நல்ல செய்தி.. அகவிலைப்படி உயர்வு – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 46% அகவிலைப்படியை முதல்வர் அறிவித்துள்ளார்.
தீபாவளி போனஸ்
உத்திர பிரதேசம் மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். அதன் படி அனைத்து மாநில அரசு ஊழியர்கள், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் 30 நாள் சம்பளத்திற்கு இணையான போனஸ், அதாவது அதிகபட்சம் ரூ.7000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம் – நோயாளிகள் அவதி!!
இந்த சலுகை தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 46% அகவிலைப்படியை பெற இருக்கின்றனர். இதற்கு முன்னதாக மே 15 ஆம் தேதி யோகி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.