3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்.. சமூக வலைத்தளபதிவு – எச்சரிக்கும் மத்திய அரசு!
சமூக வலைதளங்களில் ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தற்போது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை:
தற்போது அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒன்றிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதே நேரம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகளை கேள்விக்குறியாகி உள்ளது. சமீபத்தில் AI தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெற்று வருகிறது. இதன் காரணமாக வேலை வாய்ப்பு துறைகளிலும் அதிக பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு வந்த நல்ல செய்தி.. அகவிலைப்படி உயர்வு – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த தவறான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக அதிக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இறுதியில் அது AI தொழில்நுட்பத்தின் மூலம் தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால் சம்பந்தப்பட்ட நபர் மீது மூன்று ஆண்டு சிறை தண்டரையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.