மீண்டும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மீண்டும் ரூ.18,000 உதவித்தொகை வழங்கவுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
உதவித்தொகை:
தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவிகரமாக கர்ப்பக் காலத்தில் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்துடன் சேர்த்து ரூ.18000 வழங்கப்பட்டு வந்தது. இதன் பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் உதவித்தொகை வழங்கவுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.
3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்.. சமூக வலைத்தளபதிவு – எச்சரிக்கும் மத்திய அரசு!
மேலும், கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை 5 தவணையாக வழங்கப்பட்ட நிலையில் இனி 3 தவணையாக வழங்கப்பட இருக்கிறது. இது மட்டுமல்லாமல், 2018 ஆம் ஆண்டில் இருந்து விடுபட்டவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கர்ப்பிணி உதவித்தொகை தொடர்பான விவரங்களை அறிய 104 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.