தமிழக முதல்வருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு – அமைச்சர் சொன்ன தகவல்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த வாரம் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தற்போது நலமுடன் இருப்பதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தகவல்
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் நோய் பரவல் அதிகமாக இருந்து வருகிறது. பலருக்கு டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாக பரவி இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த வாரம் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு வந்த நல்ல செய்தி.. அகவிலைப்படி உயர்வு – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் குணமாகி இருப்பதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.