மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய மாற்றம் – நோயாளிகள் அவதி!!
மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு:
இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது மருத்துவக் காப்பீட்டு நடைமுறைகளில் சில புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, நோயாளிகள் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சைக்கான முழு பணத்தையும் செலுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டு பின்னர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து அதற்கான பணத்தை பெற்றுக்கொள்வர்.
தமிழகத்தில் இன்று (நவ. 7) 19 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம் அறிக்கை!
ஆனால், தற்போது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளியின் சிகிச்சைக்கு எந்தவித கட்டணமும் செலுத்தாமல் 100 சதவீதம் காப்பீட்டிலேயே சிகிச்சை பெரும்படியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை உபயோகமாக இருந்தாலும் குறிப்பிட்ட மருத்துவனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் விரும்பிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.