ISRO VSSC விண்வெளி மையத்தில் ரூ.63,200/- சம்பளத்தில் வேலை ரெடி – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
இஸ்ரோ – விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (ISRO VSSC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Light Vehicle Driver A, Heavy Vehicle Driver A ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் 13.11.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ISRO VSSC |
பணியின் பெயர் | Light Vehicle Driver A, Heavy Vehicle Driver A |
பணியிடங்கள் | 18 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ISRO VSSC பணியிடங்கள்:
ISRO VSSC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Light Vehicle Driver A – 09 பணியிடங்கள்
- Heavy Vehicle Driver A – 09 பணியிடங்கள்
Driver A கல்வி:
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் LVD / HVD ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.
Driver A அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் பணியில் 03 வருடங்கள் முதல் 05 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Driver A சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Pay Matrix Level – 02 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Engineering பட்டதாரிகளுக்கான TCS நிறுவன வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
ISRO VSSC தேர்வு செய்யும் விதம்:
Light Vehicle Driver A / Heavy Vehicle Driver A பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ISRO VSSC விண்ணப்பிக்கும் விதம்:
இந்த ISRO VSSC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் 13.11.2023 அன்று முதல் 27.11.2023 அன்று வரை https://www.vssc.gov.in/careers.html என்ற இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.