TNPSC CTS: எக்ஸாம் பேட்டர்ன்,பதவிகள் மற்றும் துறைகளின் முழு விவரங்கள்;

0

TNPSC CTS எக்ஸாம் எழுத போறீங்களா?
முதல்ல இந்த பேட்டர்ன் மற்றும் போஸ்டிங் விவரங்களை தெரிஞ்சுக்கோங்க!

TNPSC CTS (Combined Technical Services) தேர்வு பற்றிப் படிக்கும் பலருக்கு இருக்கும் மாபெரும் சந்தேகம்: “இந்த எக்ஸாம் எல்லாரும் ஒண்ணா தான் எழுதுவாங்களா?” என்பதுதான்.

தாள் I (Paper I)-எல்லாருக்கும் பொதுவானது

 தாள் II (Paper II) -நீங்கள் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி தனித்தனியா மாறும்!

யாரெல்லாம் என்ன எக்ஸாம் எழுதுவாங்க?
(How the Exam Works)

CTS தேர்வு என்பது இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர், சயின்ஸ் எனப் பல தொழில்நுட்பப் பதவிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் தேர்வாகும். 

  1. தாள் I (Paper I):
    நீங்கள் சிவில் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் அல்லது கெமிஸ்ட்ரி எது படித்திருந்தாலும், அனைத்து தேர்வர்களுக்கும் தாள் I
    (தமிழ் + பொது அறிவு + கணக்கு) ஒரே கேள்வித்தாள் தான்
    . இது ஒரே நாளில் நடக்கும்.

  2. தாள் II (Paper II – தொழில்நுட்பத் தேர்வு):
    இது முற்றிலும் உங்களுடைய படிப்பு சார்ந்தது. சிவில் படித்தவர் சிவில் எக்ஸாம் எழுதுவார், அக்ரிகல்ச்சர் படித்தவர் அக்ரிகல்ச்சர் எக்ஸாம் எழுதுவார். இதற்கான தேர்வுகள் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக நடக்கும்.

    TNPSC CTS தேர்வு முறை (Exam Pattern 2026)

    இந்தத் தேர்வு கணினி வழி எழுத்துத் தேர்வு (CBT Mode) மற்றும் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நேர்காணல் (Interview) ஆகிய நிலைகளைக் கொண்டது.
    எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் (Papers) உண்டு.

    தாள் I: கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொதுஅறிவு
    (3 மணி நேரம்)

    பகுதி (Part)

    பாடங்கள் (Subjects)

    கேள்விகள்

    மதிப்பெண்கள்

    தரம் (Standard)

    பகுதி A

    கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு

    100

    150

    10-ஆம் வகுப்பு (SSLC)

    பகுதி B

    பொது அறிவு (General Studies)

    75

    150

    (பகுதி B & C சேர்த்து)

    பட்டப்படிப்பு (Degree)

    பகுதி C

    திறனறிவுக் கணக்குகள் (Aptitude)

    25

    மேலுள்ள மதிப்பெண்ணில் அடங்கும்

    10-ஆம் வகுப்பு (SSLC)

தாள் II: தொழில்நுட்பப் பாடத் தேர்வு முறை
(Paper 2 Exam Pattern)

தேர்வு கூறுகள்
(Exam Components)

📝 விவரங்கள் (Details)

📘 பாடப்பிரிவு (Subject)

சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பாடம் (Core Technical Subject)

⏱️ கால அளவு (Duration)

3 மணி நேரம் (3 Hours)

❓ வினாக்களின் வகை (Question Type)

200 கொள்குறி வினாக்கள் (MCQs – Multiple Choice Questions)

💯 மொத்த மதிப்பெண்கள் (Total Marks)

300 மதிப்பெண்கள் (300 Marks)

🎓 தேர்வின் தரம் (Standard)

நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வித் தகுதி (Degree / Diploma Standard)

 

TNPSC CTS 2026: பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்கள் (Posts & Vacancies)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்தத் தேர்வின் கீழ் வரும் முக்கியப் பதவிகள் மற்றும் அவற்றின் காலிப்பணியிட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

பதவியின் பெயர்
(Post Name)

🏢 அரசுத் துறை (Department)

 காலிப்பணியிடங்கள் (Vacancies)

Block Health Statistician

குடும்ப நலத்துறை (Family Welfare)

62

Assistant Engineer (AE)

ஊரக வளர்ச்சித் துறை
(Rural Development)

50

Assistant Engineer (Highways)

நெடுஞ்சாலைத் துறை (Highways Department)

38

Assistant Engineer (Civil)

நீர்வளத் துறை
(Water Resources)

33

Junior Photographer

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை

23

Horticultural Officer

தோட்டக்கலைத் துறை (Horticulture)

17

Assistant Engineer (Civil)

பொதுப்பணித்துறை (Public Works)

14

Assistant Statistical Investigator

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை

13

Agriculture Officer (Extension)

வேளாண்மைத் துறை (Agriculture)

11

Archaeological Officer

தொல்லியல் துறை (Archaeology)

10

Drug Inspector

மருந்து கட்டுப்பாட்டு வாரியம்

09

 

           முக்கிய இணைப்புகள் (Direct Official Links) 

இங்கே கிளிக் செய்து அதிகாரப்பூர்வ நோட்டிபிகேஷன் PDF-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!

டிஎன்பிஎஸ்சி CTS தேர்வுக்கான வயது வரம்பு (AgeLimit)முழுமையான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள [இங்கே கிளிக் செய்யவும்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!