தமிழகத்தில் RTE திட்டம் 12ம் வகுப்பு வரை நீட்டிப்பு? – பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழக கட்டாய கல்வி உரிமை சட்டத்தினை 12ம் வகுப்பு வரை நீடிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உரிமை சட்டம்:
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பின் மொத்த மாணவர் சேர்க்கையில் 25% அரசு ஒதுக்கீட்டில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் தமிழக அரசால் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி சேர்க்கப்படும் 25 % மாணர்களுக்கான கல்வி கட்டணம் அரசின் மூலம் வழங்கப்படுகிறது.
அரசு பணி உங்களுடையதாக மாற சூப்பர் வாய்ப்பு – முழு விவரம் இதோ!
இதை தவிர புத்தகங்கள், சீருடை போன்ற மற்ற கட்டணம் அனைத்தும் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. எல் கே ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் இலவச கல்வி கற்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் தற்போது எட்டாம் வகுப்பு முடித்துள்ளனர். எனவே இவர்கள் 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வேறு பள்ளிக்கு மாறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட உள்ளதால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட கூடும் என்றும் பெற்றோர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates
மேலும் வேறு பள்ளிகளுக்கு சேர்க்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் சாதாரண பொருளாதார நிலையில் உள்ள பெற்றோர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த மாணவர்களுக்கு 9 முதல் 12ம் வகுப்பு வரையிலும் இலவச கட்டாய கல்வி திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.