ஜூன் 10 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு.. காரணம் இது தான்!
மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் நாளை (ஜூன் .10) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதன் காரணமாக 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் மாநில அரசுகள் திறப்பை ஒத்தி வைத்து வருகிறது. தினசரி கொளுத்தும் வெப்பத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய சூழலில் பள்ளி மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு கோவா மாநிலத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் RTE திட்டம் 12ம் வகுப்பு வரை நீட்டிப்பு? – பெற்றோர்கள் கோரிக்கை!
அம்மாநிலத்தில் தற்போது பருவ மழை பெய்வது தாமதமாகி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சமடைந்தனர். இத்தகைய காரணத்தால் நாளை (ஜூன். 10) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.