RBI வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. வீடு வாங்க இனி நல்ல நேரம் தான் – முழு விவரம்!
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருப்பதால்.. புதிதாக வீடு வாங்கி EMI கட்டி வருவோருக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது.
RBI அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாக அறிவித்தது. அதனால் வீட்டு வசதித் துறையின் பார்வையில் சாதகமானது என ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது ரெப்போ விகிதம் உயர்த்தாமல் இருப்பதால் வீட்டின் EMI செலுத்துபவராக இருந்தால் உங்களுக்கு EMI தொகையில் மாற்றம் இல்லாமல் இருக்கும். RBIன் இந்த அறிவிப்பால் வீடுகளின் தேவை மற்றும் விநியோக வேகம் தொடரும் என இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் கூட்டமைப்பின் (CREDAI) தேசிய தலைவர் போமன் இரானி தெரிவித்துள்ளார்.
ஜூன் 10 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு.. காரணம் இது தான்!
மேலும் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் (NAREDCO) தலைவர் ராஜன் பந்தேல்கர் இது குறித்து கூறுகையில், RBIன் இந்த நடவடிக்கை கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீட்டுவசதி துறைக்கு உதவும் என தெரிவித்தார். இருந்தாலும் சில தேவைகள் இந்த துறைக்கு வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனரோக் பிராபர்டியின் தலைவர் அனுஜ் பூரி கூறுகையில், ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் முடிவு வீட்டு விற்பனை வேகத்தை தக்க வைக்கும் என தெரிவித்துள்ளார்.