தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரன் ரூ.45,600க்கு விற்பனை!!
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் பொதுவாகவே வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தங்கத்தின் விலை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், நேற்று வார இறுதி நாள் என்பதால் சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6185க்கும், சவரனுக்கு ரூ.49,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5715க்கும், சவரனுக்கு ரூ. 45,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – தொடக்க கல்வித்துறை வெளியீடு!
அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 6170க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை அடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 5700க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.78க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று 20 காசுகள் அதிகரித்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.