SBI CLERK 2026 IMPORTANT UPDATES

0
sbi-clerk-2026

டிகிரி முடிச்சிட்டு வேலை தேடுறீங்களா?
உங்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்.. எஸ்பிஐ கிளர்க் 2026!

“காலேஜ் முடிச்சு இத்தனை மாசம் ஆச்சு.. இன்னும் ஒரு நல்ல வேலை கிடைக்கலையே” – இந்த ஒரு கவலை மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கா?வீட்டுல இருக்கிறவங்களோட எதிர்பார்ப்பும், கேள்விகளும் உங்களை தினமும் ஏதோ ஒரு வகையில காயப்படுத்திட்டு தான் இருக்கும்.ஒரு நடுத்தரக் குடும்பத்து பட்டதாரி பையனோட அல்லது பொண்ணோட ஒட்டுமொத்தக் குடும்பக் கஷ்டத்தையும் தீர்க்கக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பு தான் இந்த எஸ்பிஐ வங்கி வேலை (SBI Junior Associate).“பேங்க் எக்ஸாம்னாலே ரொம்ப கஷ்டம், நமக்கெல்லாம் செட் ஆகாது” அப்படின்னு நினைச்சு பயந்துடாதீங்க. 

(முக்கியமான எக்ஸாம் தேதிகள்
(நோட் பண்ணி வச்சுக்கோங்க!)

எப்போ எக்ஸாம் வரும்னு தெரிஞ்சா தானே நம்மளால படிக்கவே உட்கார முடியும்? டேட்ஸ் இதோ:

    • அபிஷியல் நோட்டிபிகேஷன் (Notification):
      ஜூலை அல்லது ஆகஸ்ட் 2026

    • முதலாவது எக்ஸாம் (Prelims):
      செப்டம்பர் 26, 27 மற்றும் அக்டோபர் 3, 2026

    • மெயின் எக்ஸாம் (Mains):
      நவம்பர் 23, 2026

நான் இந்த எக்ஸாம் எழுதலாமா? (தகுதிகள்)

1. என்ன படிச்சிருக்கணும்? (Qualification):

    • நீங்க ஏதோ ஒரு காலேஜ்ல ஏதோ ஒரு டிகிரி (Any Degree) முடிச்சிருந்தா போதும். பிஇ, பிஏ, பிகாம், பிஎஸ்சி-ன்னு எதுவாக இருந்தாலும் ஓகே தான். காலேஜ்ல மார்க் கம்மியா இருக்கே, அரியர் வச்சிருந்தேனே அப்படின்னு எல்லாம் யோசிச்சு ஃபீல் பண்ணாதீங்க. கையில டிகிரி சர்டிபிகேட் இருந்தா போதும்.

    • ஃபைனல் இயர் (Final Year) ஸ்டூடென்ட்ஸா நீங்க?
      நீங்க இன்னும் காலேஜ் படிச்சு முடிச்சு ரிசல்ட் வராம இருந்தாலும் கூட, இந்த எக்ஸாமுக்கு தாராளமா அப்ளை பண்ணலாம்!

2. வயசு என்ன இருக்கணும்? (Age Limit):

    • ஜெனரல் கேட்டகிரி (General):
      குறைந்தது 20 வயசு முடிஞ்சிருக்கணும்.
      அதிகபட்சமா 28 வயசுக்குள்ள இருக்கணும்.

    • வயசு தளர்வு (Age Relaxation):
      நம்ம ஊர் அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு 5 வருஷமும், ஓபிசி (OBC) பிரிவினருக்கு 3 வருஷமும் வயசுல தளர்வு உண்டு.

அப்ளிகேஷன் ஃபீஸ் எவ்ளோ வரும்? (Application Fee)

இத நெட் பேங்கிங், டெபிட்/கெடிட் கார்டு அல்லது உங்க போன்ல இருக்குற UPI(GPay/PhonePe) மூலமா ஆன்லைன்ல மட்டும்தான் கட்ட முடியும்.

    • General / OBC / EWS பிரிவினர்: ₹750/-

    • SC / ST / PwBD / எக்ஸ்-சர்வீஸ்மேன்: கட்டணம் எதுவும் இல்லை
      (முற்றிலும் இலவசம்).

அதிகாரப்பூர்வ நேரடி இணைப்புகள் (Official Direct Links)

எஸ்பிஐ அதிகாரப்பூர்வ வலைத்தளம்:
State Bank of India (SBI) Official Website 

வேலைவாய்ப்பு மற்றும் அறிவிப்புகள் பக்கம்:
SBI Careers Portal 

புதிய காலிப்பணியிடங்கள் மற்றும் விண்ணப்ப லிங்க்:
SBI Current Openings 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!