Daily Current Affairs For State Level Exams-May 2026

0

மாநில அரசுத் தேர்வுகளுக்கான தினசரி நடப்பு நிகழ்வுகள்;

ஹலோ ஆஸ்பிரண்ட்ஸ்!
இன்னைக்கு நியூஸ் பேப்பர்ல என்னதான் வந்துச்சு?’
அப்படின்னு கூகுள்ல தேடி அலைஞ்சு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நம்ம மாநில அரசு தேர்வுகளுக்கு இன்னைக்கு
கண்டிப்பா கேட்கப்போற அந்த 5 கரண்ட் அஃபையர்ஸை
மட்டும் தேடி, நச்சுன்னு உங்களுக்காக எடுத்துட்டு வந்திருக்கேன்.
வாங்க உள்ள போலாம்!

1. தூத்துக்குடியில் இந்தியாவின் முதல் ‘மெகா கிரீன்ஃபீல்ட் கப்பல் கட்டும் தளம்’ (Mega Greenfield Shipyard)

நம்ம தமிழ்நாட்டுல இருக்குற தூத்துக்குடி துறைமுகத்துல, இந்தியாவோட முதல் பிரம்மாண்டமான ‘மெகா கிரீன்ஃபீல்ட் கப்பல் கட்டும் தளம்’ அமைக்கப்போறாங்க. இதுக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகமும், தென் கொரியாவோட முன்னணி நிறுவனமும் ஒரு முக்கியமான ஒப்பந்தம் பண்ணிருக்காங்க.

(TNPSC Unit 9 & Economy):
தமிழ்நாட்டோட தொழில் வளர்ச்சி மற்றும் கடல்சார் பொருளாதாரம்
(Blue Economy) பத்தி குரூப் 1, குரூப் 2 மெயின்ஸ்ல கேள்வி வரும்போது இதை நீங்க கரண்ட் அஃபேர்ஸ் எக்ஸாம்பிளா எழுதலாம். தென் தமிழகத்துல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க இது ஒரு பெரிய வாய்ப்பு!!

2. ‘கள்ளக்கடல்’ ஆபத்தை முன்கூட்டியே கணிக்கப் புதிய சிஸ்டம்!

 

எந்த ஒரு புயல் அறிகுறியும் இல்லாம திடீர்னு பெரிய அலைகள் வந்து கரையைத் தாக்குறதுக்கு பேர்தான் ‘கள்ளக்கடல்’ (Kallakkadal Swell Surge).இதைக் கண்டுபிடிக்க நம்ம இந்திய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) ஒரு புதிய கடலோர வெள்ளக் கண்காணிப்பு சிஸ்டத்தை உருவாக்கியிருக்காங்க.

(Geography & Disaster Management):
ஜியோகிராபி மற்றும் பேரிடர் மேலாண்மை பகுதியில இந்த ‘கள்ளக்கடல்’ பத்தி கேட்க அதிக வாய்ப்பிருக்கு.தெரிஞ்சுக்கோங்க: மலையாளத்துல “கள்ளன்”னா திருடன். திருடனை மாதிரி சத்தமே இல்லாம வந்து கரையைத் தாக்குறதுனால தான் கேரளா, தமிழ்நாடு கடலோர மக்கள் இதுக்கு ‘கள்ளக்கடல்’னு பேர் வச்சாங்க. இது பொதுவாகப் பருவமழைக்கு முன்னாடி இந்தியப் பெருங்கடல்ல ஏற்படுற காற்றழுத்தத்தால உருவாகுது.

3. தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தியை
அதிகரிக்கப் புதிய மீட்டிங்;

நம்ம தமிழ்நாட்டை “இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரம்” (EV Capital of India)-னு சொல்லுவாங்க. இந்த இடத்தை இன்னும் ஸ்ட்ராங் பண்றதுக்காக BMW, TVS போன்ற பெரிய கார், பைக் நிறுவனங்களோட உயர் அதிகாரிகளை கூப்பிட்டு நம்ம மாநில அரசு ஒரு பெரிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்காங்க.

(TNPSC Unit 9 – தமிழக அரசின் தொழில் கொள்கை):
தமிழ்நாட்டோட தொழில்துறை கொள்கைகள் மற்றும் புதிய முதலீடுகள் பத்தி டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் அடிக்கடி வினாக்கள் வரும்.தமிழ்நாட்டுல இப்போ EV வாகனங்களுக்கு எவ்ளோ முக்கியத்துவம் தர்றாங்கன்னு காட்ட இது ஒரு சூப்பர் எக்ஸாம்பிள்.

4. கீழடி அகழ்வாராய்ச்சி: பானை ஓடுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில இப்போ நடந்துட்டு இருக்குற அகழ்வாராய்ச்சியில, சங்க காலத்து மனிதர்கள் பயன்படுத்தின சுடுமண் பாண்டங்கள் மற்றும் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைச்சிருக்கு.

(TNPSC Unit 8 – தமிழ்நாட்டின் வரலாறு & பண்பாடு):
யூனிட் 8-ல கீழடி பத்தி கேள்வி இல்லாம கொஸ்டின் பேப்பரேஇருக்காது.கீழடி வைகை நதிக்கரையில இருக்குறதும், தமிழர்களோட நகர நாகரிகம் கிமு 6-ஆம் நூற்றாண்டைச்
(6th Century BCE) சேர்ந்ததுன்னு இந்த கண்டுபிடிப்புகள் நிரூபிச்சிருக்குறதும் எக்ஸாமுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்!

5. மதுரை விமான நிலையத்திற்கு அதிகாரப்பூர்வமாகச் சர்வதேச அந்தஸ்து!

தென் தமிழக மக்களின் பல வருஷக் கனவான மதுரை விமான நிலையத்தை (Madurai Airport) அதிகாரப்பூர்வமா சர்வதேச விமான நிலையமா அறிவிக்க மத்திய அமைச்சரவை இன்னைக்கு ஃபைனல் ஒப்புதல் குடுத்துட்டாங்க.

(TNPSC Unit 9 – தமிழக புவியியல் & உள்கட்டமைப்பு):
தமிழ்நாட்டோட சர்வதேச போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு இது ரொம்ப முக்கியம். இதனால தென் மாவட்டங்களோட வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறை வேற லெவல்ல வளரப்போகுது.

இன்றைய மாதிரி கேள்வி (Daily Practice Question)

1. திருடனைப் போல அறிகுறியே இல்லாமல் திடீரென வந்து கரையைத் தாக்கும் ‘கள்ளக்கடல்’ (Kallakkadal) அலை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்தியக் கடலோரப் பகுதிகள் எவை?

A) குஜராத் மற்றும் மகாராஷ்டிரா
B) ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்
C) கேரளா மற்றும் தமிழ்நாடு
D) ஆந்திரப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசம்

தமிழக அரசு புதிய தேர்வு அறிவிப்பு 2026 விவரங்கள் உள்ளே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!