தீபாவளிக்கு எத்தனை நாட்கள் பள்ளி விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின்பு அதிக அளவில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் வரையிலும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணத்தினால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர். இதனால், நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பள்ளிமாணவர்களுக்கான விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரன் ரூ.45,600க்கு விற்பனை!!
மேலும், தீபாவளி விடுமுறை முடிவடைந்த பிறகு அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை விடப்படும் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளி விடுமுறை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
TNPSC Book Material மற்றும் Test Pack ஆகியவை வேண்டுமா?? TNPSC தேர்வுக்கு சிறப்பாக துடிக்கும் அனைவர்க்கும் சூப்பர் வாய்ப்பு.. இந்த Formஐ பூர்த்தி செய்யுங்கள்..