இந்தியாவில் இலவச ரேஷன் திட்டம் மேலும் நீட்டிப்பு – பிரதமர் புதிய உத்தரவு!
இந்தியாவில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) இலவச ரேஷன் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மோடி அறிவிப்பு
இந்தியாவில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் மூலமாக ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 80 கோடி மக்கள் பயன்பெற இருக்கின்றனர்.
தீபாவளியையொட்டி திருப்பதி கோவிலில் சிறப்பு ஆஸ்தானம் – நவ.10 முதல் டிக்கெட் வெளியீடு!!
கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA) இன் கீழ் தகுதியான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. PMGKAY இந்த திட்டம் NFSA இன் கீழ் இரண்டு வகையான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை உள்ளடக்கியது. அதாவது அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்பங்கள் (PHH) என மொத்தம் 81.35 கோடி பயனாளிகளை உள்ளடக்கியது.