இன்றைய பெட்ரோல், டீசல் விலை பட்டியல் – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!!
தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை:
சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் ஏற்ற இறக்கம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிப்பு கூட்டப்பட்ட வரி, சரக்கு கட்டணம் உள்ளூர் வரி ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இலவச ரேஷன் திட்டம் மேலும் நீட்டிப்பு – பிரதமர் புதிய உத்தரவு!
இதனிடையே, தீபாவளி பரிசாக 10% வரைக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்கலாம் என மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், இன்று 534 வது நாளாக பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
TNPSC தேர்வு பற்றி தெளிவு இல்லாமல் உள்ளீர்களா?? உங்களுக்கு இதோ சூப்பர் வாய்ப்பு கிடைத்து விட்டது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தகவல் அறிந்து கொள்ளலாம்.