தீபாவளியையொட்டி திருப்பதி கோவிலில் சிறப்பு ஆஸ்தானம் – நவ.10 முதல் டிக்கெட் வெளியீடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதி ஆஸ்தானம் நடைபெற இருக்கிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு தங்க வாசல் முன்பாக காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நவ.07ம் தேதி இந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!
மேலும், விடுமுறையொட்டி கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வுக்கான டிக்கெட் நவ.10 முதல் வெளியிடப்பட இருக்கிறது. இந்த, தீபாவளி ஆஸ்தானம் நிகழ்வையொட்டி, கோவிலில் நடைபெறும் ஆர்ஜித சேவை உள்ளிட்ட பிற சேவைகள் தீபாவளியன்று ரத்து செய்யப்படவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.