பான் KYC செயல்முறை முடிக்காதவர்களின் கணக்கு முடக்கம் – SEBI அதிரடி!!
பான் கார்டு தொடர்புடைய விவரங்கள் மற்றும் KYC செயல்முறையை முடிக்காதவர்களின் கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு:
பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக நடைபெறுவதற்கு வங்கி கணக்குடன் பான் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) சில முக்கிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் கட்டாயமாக பான் கார்டு தொடர்புடைய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பான் விவரங்கள் மற்றும் கேஒய்சி விவரங்கள் முடிக்கப்படாத பட்சத்தில் உங்களது வங்கி பரிவர்த்தனை கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என SEBI அறிவித்துள்ளது. எனவே, கட்டாயமாக முதலீட்டாளர்கள் அனைத்து செயல்முறையும் முடிக்கும்படி இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ளது.