வீட்டில் இருந்த படியே புதிய பான் கார்டு பெற வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க!!
வீட்டில் இருந்த படியே புதிய பான் கார்டிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய பான் கார்டு:
ஆதார் கார்டினை போல ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும் பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை என அனைத்திலும் பான் கார்டினை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது. இத்தகைய, பான் கார்டினை உங்களால் வீட்டில் இருந்த படியே பெற்றுக்கொள்ள முடியும். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாக எப்படி? புதிய பான் கார்டுக்கு அப்ளை செய்வது என்பதை பார்க்கலாம்.
சற்றும் குறையாத காய்கறிகளின் விலை – பொதுமக்கள் அவதி!!
முதலில், NSDL ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று உங்களது பான் கார்டு எண், ஆதார் எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு விவரங்களை பதிவு செய்யவும். பின்னர், உங்களது பான் விவரங்களை சரிபார்த்து OTP என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வந்திருக்கும் OTPஐ பதிவு செய்து ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பித்த அடுத்த 7 நாட்களுக்குள் புதிய பான் கார்டு நகல் உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.