சற்றும் குறையாத காய்கறிகளின் விலை – பொதுமக்கள் அவதி!!
தமிழகத்தில் காய்கறிகளின் விலை சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காய்கறிகளின் விலை:
தமிழகத்தில் ஓரளவுக்கு பருவ மழை குறைந்து வந்தாலும் காய்கறிகளின் விலை சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியலை காணலாம். அந்த வகையில், அவரைக்காய் கிலோ ரூ.50க்கும், நெல்லிக்கனி ரூ.102க்கும், மக்காச்சோளம் ரூ. 80க்கும், பீட்ரூட் ரூ. 35க்கும், கத்தரிக்காய் ரூ.25க்கும், முட்டைக்கோஸ் ரூ. 12க்கும், குடைமிளகாய் ரூ. 30-க்கும், கேரட் ரூ.38க்கும், காலிஃப்ளவர் ரூ. 20க்கும், சௌசௌ ரூ.20க்கும், தேங்காய் ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் இதோ!
இதனை அடுத்து, இஞ்சி கிலோவுக்கு ரூ. 240 க்கும், பச்சை பட்டாணி ரூ. 150க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், மாங்காய் ரூ.35க்கும், பெரிய வெங்காயம் ரூ. 60க்கும், பீர்க்கங்காய் ரூ. 50க்கும், உருளைக்கிழங்கு ரூ.35க்கும், புடலங்காய் ரூ. 40க்கும், தக்காளி ரூ.38க்கும், வாழைப்பூ ரூ. 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவ மழை இன்னும் சற்று குறைந்தால் அடுத்தடுத்த நாட்களில் காய்கறிகளின் விலை சற்று குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.