தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. வாரத்தின் தொடக்கத்திலேயே திடீரென உயர்ந்த தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்க அணிகலன்கள் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. பெரும்பாலும் பெண்கள் மற்றும் நகை பிரியர்கள் நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இன்று (நவ.20) காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள் – அரசு வெளியிட்ட தகவல்!
இதனையடுத்து ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 45, 640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,705 -க்கு விற்பனையாகி வருகிறது. அதனை தொடர்ந்து ஒரு கிராம் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.79.00 -க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 க்கு விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.