தமிழகத்தில் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் பண்டிகை மற்றும் விழா காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பொது போக்குவரத்தை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் இழக்கப்படுவது வழக்கம். அதே போல தற்போது கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக பல்கலைக்கழக தேர்வில் பழைய வினாத்தாள் – அரங்கேறிய விநோத சம்பவம்!
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் நடைபெறவுள்ளது. இந்த விழாவை காண தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிபவர்கள் இவர்களின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அத்துடன் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க 9 தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.