அனுமதியில்லாமல் மருத்துக்கடைகளில் விற்பனையாகும் ஆண்டிபயாடிக் – பொதுமக்களே உஷார்!!
மத்திய அரசு தடை செய்தும் மருந்து கடைகளில் ஆண்டிபயாடிக் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆண்டிபயாடிக்:
இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்படாத 70 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்டிபயாடிக் FDC மருந்து வகைகள் சாதாரணமாக மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சாதாரண உடல்நலக் கோளாறுகளை கூட சரி செய்யாத இந்த மருந்துகளை மத்திய அரசு தடை செய்தும் மருந்து கடைகளில் இன்னும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு!
பொதுமக்கள் பாக்டீரியா தொற்றுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், சில நேரங்களில் மருந்து கடைகளில் கிடைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வைரஸ் தொற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால், பெரிதளவில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். சிறிய காய்ச்சல், தலைவலி என்றாலும் கண்ட மருந்துகளை வாங்கி உண்ணாமல் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.