வித்யாதன் பிளஸ் 1 உதவித்தொகை திட்டம் 2026: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ₹20,000 வரை நிதியுதவி!

0

வித்யாதன் பிளஸ் 1 உதவித்தொகை திட்டம் 2026:
பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கு ஆண்டுக்கு ₹10,000 முதல் ₹20,000 வரை நிதியுதவி!

பள்ளிப் படிப்பில் திறமை இருந்தும், பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் மேல் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்காகச் சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை (Sarojini Damodaran Foundation) வழங்கும் மிக முக்கியத் திட்டம் தான் வித்யாதன் தமிழ்நாடு பிளஸ் 1 உதவித்தொகைத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குப் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு முடியும் வரை ஆண்டுதோறும் கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது.2026-2027 ஆம் கல்வியாண்டில் தற்போது 11-ஆம் வகுப்பு (Plus 1) சேரவிருக்கும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவுத் தகுதிகள் மற்றும் முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

உதவித்தொகை விவரங்கள் (Scholarship Amount)

    • இளங்கலை படிப்புகள் (UG Course):
      கல்லூரி முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை ஆண்டுக்கு ₹10,000 Vidyadhan Scholarship வீதம் வழங்கப்படும்.
    • முதுகலை படிப்புகள் (PG Course):
      அதே பிரிவில் மேல் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹20,000 Vidyadhan Scholarship வரை கல்வி நிதியுதவி நீட்டிக்கப்படும்.
    • பராமரிப்பு (Renewal):
      ஒவ்வொரு கல்வியாண்டிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதன் அடிப்படையில் இந்த உதவித்தொகை தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்? (Eligibility Criteria)

    • மாநில வரம்பு:
      விண்ணப்பிக்கும் மாணவர்கள் கண்டிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
    • மதிப்பெண் வரம்பு:
      10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் (SSLC) நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தற்போது பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.
    • குடும்ப வருமானம்:
      குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply?)
    • தகுதியான மாணவர்கள் SDF வித்யாதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    • தேவையான ஆவணங்கள்:
      10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப வருமானச் சான்றிதழ், புகைப்படம் (Photograph), மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி (Email ID) SDF Portal.
    • விண்ணப்பிக்க இறுதி நாள்:
      இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை 2026 வரை வரவேற்கப்படுகின்றன.

DIRECT LINK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!