புதிய விதியை அறிமுகப்படுத்திய ICC – கேப்டன் & பவுலர்கள் கவனத்திற்கு!!!
சமீபத்தில் இந்திய ஆடவர் அணியானது ஐசிசி ODI உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. அடுத்ததாக அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்தியா நாளை முதல் பங்கேற்க உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஓர் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
குணசேகரனின் முகத்தில் கரியை பூசிய தம்பிகள் – எதிர்நீச்சல் ட்விஸ்ட்!
அதாவது ஓவர்களுக்கு நடுவே அணிகள் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த கடிகாரம் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. ஒருவேளை பவுலிங் செய்யும் அணி ஒரு ஓவர் முடிந்த பின் அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் வீசத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். இந்த நிகழ்வு 3வது முறையாக தொடர்ந்தால் எதிரணிக்கு 5 ரன்கள் போனஸ் ஆக வழங்கப்படும். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ICC வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.