குணசேகரனின் முகத்தில் கரியை பூசிய தம்பிகள் – எதிர்நீச்சல் ட்விஸ்ட்!
எதிர்நீச்சல் சீரியல் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி திருப்பங்களுடன் சென்று வருகிறது. கதையில் அப்பத்தாவின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்:
சன் டிவியின் பிரைம் டைம் தொடரான எதிர் நீச்சல் சீரியல் தற்போது மிகவும் அதிரடியான கதைக்களத்துடன் சென்று வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக சொல்லி அப்பத்தாவை காரில் ஏற்றி சென்ற போது மர்ம சத்தம் ஒன்று கேட்டு கார் வெடித்து விட்டதாகவும் அப்பத்தா அதில் இறந்து விட்டதாகவும் சொல்லி ஊரை ஏமாற்ற குணசேகரன் பொய் சொல்கிறார். ஆனால் குணசேகரனின் குணத்தை நன்கு அறிந்த ஜனனி கண்டிப்பாக அப்பத்தான் சாகவில்லை, அவர் மீண்டும் வருவார் என்று சொல்லி சண்டை போடுகிறார். ஆனால் குணசேகரன் அதையும் மீறி அப்பதாவிற்கான சடங்குகளை செய்ய தொடங்குகிறார்.
தமிழக பல்கலைக்கழக தேர்வில் பழைய வினாத்தாள் – அரங்கேறிய விநோத சம்பவம்!
குணசேகரனின் வாக்கை அப்படியே நம்பும் கதிர் மற்றும் ஞானம் இருவரும் கூட இந்த விஷயத்தில் குணசேகரன் மீது சந்தேகப்பட தொடங்குகின்றனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக குணசேகரன் அப்பத்தாவின் விஷயத்தில் செய்துள்ள சதிகள் முழுவதும் கதிர் மற்றும் ஞானத்திற்கு தெரிய வருகிறது. இதனால் இருவரும் சேர்ந்து குணசேகரனை போலீசில் சொல்லி ஜெயிலில் அடைகின்றனர். கதிர் மற்றும் ஞானம் இருவரும் இவ்வாறு செய்ததை குணசேகரன் நம்ப முடியாமல் இருக்கிறார்.